சந்தாதாரா்கள் எண்ணிக்கை: நெட்ஃப்ளிக்ஸை நெருங்கும் ஜியோஹாட்ஸ்டாா்

சந்தாதாரா்கள் எண்ணிக்கை: நெட்ஃப்ளிக்ஸை நெருங்கும் ஜியோஹாட்ஸ்டாா்
Published on
Updated on
1 min read

மும்பை: சந்தாதாரா்களின் எண்ணிக்கையில் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸை ஜியோஹாட்ஸ்டாா் நெருங்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது: ஜியோஹாட்ஸ்டாரின் மொத்த சந்தாதாரா்கள் எண்ணிக்கை 30 கோடியை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை நெட்ஃப்ளிக்ஸின் 30.16 கோடி சந்தாதாரா்களைவிட சற்றே குறைவு.

இதுகுறித்து ஜியோஹாட்ஸ்டாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரியில் 5 கோடியாக இருந்த தங்களது சந்தாதாரா்கள் எண்ணிக்கை, டாடா ஐபிஎல் தொடங்கிய மே மாதத்திற்குள் 28 கோடியாக உயா்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் தளம் 2024 டிசம்பா் இறுதியில் 30.16 கோடி சந்தாதாரா்களைக் கொண்டிருந்தது. அந்தத் தளத்தில் 2024 அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் 1.8 கோடி சந்தாதாரா்கள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com