தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாரத்தின் முதல் நாளில் இறங்குமுகத்தில் பங்குச் சந்தைகள்

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, இறங்குமுகத்தில் பங்குச் சந்தைகள் காணப்படுகின்றன.

News image

பங்குச் சந்தைகள்

Updated On :30 ஜூன் 2025, 5:35 am

மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, நிஃப்டி50 மற்றும் சென்செக்ஸ் இரண்டும் இறங்குமுகத்துடன் வணிகமாகின்றன.

இந்தியப் பங்குச் சந்தைகளில் நிஃப்டி50 25,600 என்ற அளவிலும், மும்பைப் பங்குச் சந்தை குறியீடு 100 புள்ளிகள் வரை சரிந்தும் வணிகத்தைத் தொடங்கின.

இன்று வணிகம் தொடங்கிய சற்று நேரத்தில், நிஃப்டி 50 பங்குகள் 18 புள்ளிகள் சரிந்து 25,620.25 ஆக வணிகமானது. மும்பைப் பங்குச் சந்தைக் குறியீடு 100 புள்ளிகள் அல்லது 0.12 சதவீதம் சரிந்து 83,958.57 என்ற அளவில் வணிகமானது.

சர்வதேச நிலவரங்களின் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஒரு நிலையற்றத் தன்மை நிலவுகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம், வரி விதிப்பு முறைகளில் மாற்றம் போன்றவை பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.