வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (மார்ச் 3) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 112 புள்ளிகளும் நிஃப்டி பெரிய மாற்றங்களின்றி 5 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.
மெட்டல், ரியாலிட்டி, நுகர்வோர் பொருள்கள் துறை, ஐடி துறை பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்த நிலையில், மீடியா, வங்கித் துறை, எண்ணெய் & எரிவாயு துறை பங்குகள் எதிர்மறையாக இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் சிறு, குறு நிறுவனங்கள் 0.7 சதவீதம் சரிவுடனும் இடைநிலை நிறுவனங்கள் 0.25 சதவீதமும் உயர்வுடனும் இருந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.16 புள்ளிகள் சரிந்து 73,085.94 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.15 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.024 சதவீதம் சரிவாகும்.
வணிகத்தின் தொடக்கத்தில் 73,427 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், 72,784 வரை சென்றது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். நாளின் பிற்பாதியில் சற்று உயர்ந்து 73,649 என்ற இன்றைய நாளின் உச்சத்தை எட்டியது.
பின்னர் 112 புள்ளிகள் வரை சரிந்து 73,085 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 18 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் 2.10% உயர்வுடன் இருந்தன. இதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் 1.64%, இன்ஃபோசிஸ் 1.24%, பஜாஜ் ஃபைனான்ஸ் 1.15%, எல்&டி 1.06%, எம்&எம் 1.04%, டாடா ஸ்டீல் 1.00% உயர்வுடன் இருந்தன.
இதேபோன்று ரிலையன்ஸ் -2.41%, பஜாஜ் ஃபின்சர்வ் -1.81%, எச்டிஎஃப்சி வங்கி -1.79%, அதானி போர்ட்ஸ் -1.53%, மாருதி சுசூகி -1.43%, ஆக்சிஸ் வங்கி -0.82%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.62%, இந்தஸ்இந்த் வங்கி -0.62% சரிவுடன் இருந்தன.
நிஃப்டி நிலவரம்
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.024 சதவீதம் சரிவாகும்.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கோல் இந்தியா, ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜான் ஃபின்சர்வ், ஹீரோ மோட்டோகார்ப், டாடா கன்சியூமர் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.
இதையும் படிக்க | ஒரே மாதத்தில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.