டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது.
Published on

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது.

டெஸ்லாவின் மதிப்பு கடந்த வாரத்தில் 10% சரிந்த நிலையில், இதுவரை 800 பில்லியன் டாலர் (6.9 ஆயிரம் கோடி) வரை சரிவைச் சந்தித்துள்ளது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) பொறுப்பாளருமான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சமீபகாலமாக இவரின் சொத்து மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அதாவது அமெரிக்க அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கும், செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு (டிஓஜிஇ) தலைமைப் பொறுப்பேற்றது முதலே அவரின் சொத்து மதிப்புகள் இறங்கு முகத்தில் உள்ளன.

கடந்த மாதம் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 22.2 பில்லியன் சரிந்து 358 பில்லியனாக இருந்தது. இதற்கு பெரும்பாலும் டெஸ்லா பங்குகளில் சரிவே காரணமாக இருந்தது.

இதனிடையே 7வது வாரமாக டெஸ்லாவின் மதிப்பு சரிந்துள்ளது. வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) 10% சரிந்துள்ளது. இதன்மூலம் அதன் உச்ச மதிப்பில் இருந்து 800 பில்லியன் டாலர் வரை டெஸ்லா மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய சரிவு இதுவாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 480 பில்லியன் டாலர் சரிந்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில், எலான் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்தே அவரின் சொத்து மதிப்பு சரிந்து வருவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | மின்சார காா்களின் விற்பனை 19% அதிகரிப்பு

இதையும் படிக்க | ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com