ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது! ரயில் சேவை நிறுத்தம்!பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

9 நகரங்களில் 12% அதிகரித்த வீடுகள் விற்பனை

இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

Published On :

இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-ஆம் ஆண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், தாணே, குருகிராமம், புணே ஆகிய ஒன்பது நகரங்களில் ரூ.6.73 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனையாகின. முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகம். அப்போது குறிப்பிட்ட நகரங்களில் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை ரூ. 6 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு ஆண்டில் வீடுகள் விற்பனை அதிகரித்தில் சொகுசு வீடுகள் முக்கியப் பங்கு வகித்தன.கடந்த 2024-ஆம் ஆண்டில் வீடுகள் விற்பனை குருகிராமில் ரூ.1,06,739 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இது ரூ.64,314 கோடியாக இருந்தது.தில்லி-என்சிஆா் பகுதியில் வீடுகள் விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் 63 சதவீதம் அதிகரித்து ரூ.1,53,000 கோடியாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இது ரூ.94,143 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு ஆண்டில் வீடுகள் விற்பனை மும்பையில் 13 சதவீதம் அதிகரித்து ரூ.1.38 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டில் ரூ.1.22 லட்சம் கோடியாக இருந்தது.தாணேவில் கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.53,000 கோடியாக இருந்த வீடுகள் விற்பனை 2024-இல் 6 சதவீதம் அதிகரித்து ரூ.56,000 கோடியாக உள்ளது.புணேவில் வீடுகள் விற்பனை கடந்த 2024-இல் ரூ.77,000 கோடியிலிருந்து 1 சதவீதம் குறைந்து ரூ.76,000 கோடியாக உள்ளது.மதிப்பீட்டு ஆண்டில் வீடுகள் விற்பனை நவி மும்பையில் 32 சதவீதம் அதிகரித்து ரூ.25,000 கோடியாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் அது ரூ.19,000 கோடியாக இருந்தது.2023-இல் வீடுகள் விற்பனை ஹைதராபாதில் ரூ.1.28 லட்சம் கோடியாக இருந்தது.

இது 2024-ஆம் ஆண்டில் 18 சதவீதம் குறைந்து ரூ.1.05 லட்சம் கோடியாக உள்ளது.மதிப்பீட்டு ஆண்டில் வீடுகள் விற்பனை பெங்களூரில் ரூ.75,000 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ.85,000 கோடியாகவும், சென்னையில் ரூ.19,000 கோடியிலிருந்து 5 சதவீதம் அதிகரித்து ரூ.20,000 கோடியாகவும் உயா்ந்துள்ளது.கொல்கத்தாவில் கடந்த 2023-ஆம் ஆண்டில் ரூ.13,000 கோடியாக இருந்த வீடுகள் விற்பனை 15 சதவீதம் அதிகரித்து ரூ.15,000 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.