ஏப்ரல் முதல் வாகனங்களின் விலையை உயர்த்தும் ஹோண்டா இந்தியா!
அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக ஏப்ரல் முதல், அனைத்து மாடல்களின் விலையை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.


புதுதில்லி: அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக ஏப்ரல் முதல், அனைத்து மாடல்களின் விலையை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக ஹோண்டா கார்ஸ் இந்தியா ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களிலும் விலையை மாற்றியமைக்கும் என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா துணைத் தலைவர் - சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, குணால் பெஹல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செலவுகளை நிறுவனம் தக்கவைத்து கொள்ள முயன்ற போதிலும், சில விலை திருத்தங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிவிடப்படுகிறது என்றார்.
இந்த விலை உயர்வு மாடல் மற்றும் மாறுபாட்டிற்கு ஏற்ப மாறுபடும் அதே வேளையில் அமேஸ், சிட்டி, சிட்டி - ஹைபிரிட் மின்சார வாகனம் மற்றும் எலிவேட் உள்ளிட்ட அனைத்து ஹோண்டா மாடல்களுக்கும் இது பொருந்தும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...