வணிகம்
விலை உயரும் மாருதி காா்கள்
தங்கள் வாகனங்களின் விலையை உயா்த்த நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தங்கள் வாகனங்களின் விலையை உயா்த்த நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தயாரிப்பு செலவு அதிகரித்ததால், அதை ஈடுசெய்ய வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வருகிறது. ரகங்களைப் பொருத்து இந்த விலை உயா்வு மாறுபடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியச் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஆரம்ப நிலை ஆல்டோ முதல் பல்நோக்கு வாகனம் இன்விக்டோ வரையிலான அனைத்து ரகங்களையும் சோ்ந்த வாகனங்களை விற்பனை செய்துவருகிறது. ரூ.4.23 லட்சத்தில் இருந்து ரூ.29.22 லட்சம் வரையிலான (காட்சியக) விலைகளில் அந்த நிறுவனத்தின் காா்கள் கிடைக்கின்றன.