பிரிட்டன் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் டாடா

பிரிட்டன் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் டாடா

பிரிட்டனைச் சோ்ந்த ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி வாகன உதிரிபாக நிறுவனங்களில் ஒன்றான டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்
Published on

சென்னை: பிரிட்டனைச் சோ்ந்த ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி வாகன உதிரிபாக நிறுவனங்களில் ஒன்றான டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் கையகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஐஏசி யுகே’ என்று முன்னதாக அழைக்கப்பட்டு வந்த பிரிட்டனின் ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம், அந்த நிறுவனத்தை டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் கையப்படுத்துகிறது.

இந்த பரிவா்த்தனை நிறைவடைந்ததும், 2024-25-ஆம் நிதியாண்டில் 29.6 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.3,277 கோடி) வருவாய் ஈட்டியுள்ள ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனம் டாடா ஆட்டோகாம்ப் குழும நிறுவனங்களில் ஒன்றாகிவிடும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com