இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.
Published on

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடனளிப்பு முந்தைய நிதியாண்டைவிட 69 சதவீதம் உயா்ந்துள்ளது. நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு (ஏயுஎம்) 52 சதவீதம் உயா்ந்து ரூ.2,400 கோடியாகியுள்ளது.

மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனத்தின் வாராக் கடன் விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com