மார்ச் காலாண்டில் சோபா லிமிடெட் லாபம் 6 மடங்கு அதிகரிப்பு!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான சோபா லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.40.85 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
மார்ச் காலாண்டில் சோபா லிமிடெட் லாபம் 6 மடங்கு அதிகரிப்பு!
Published on
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான சோபா லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.40.85 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.7.02 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில், அதன் மொத்த வருமானம் ரூ.1,270.73 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே அதன் முந்தைய ஆண்டு அதே காலத்தில் இது ரூ.791.25 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

2024-25 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டு ரூ.49.11 கோடியிலிருந்து ரூ.94.68 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் அதன் மொத்த வருமானம் ரூ.4,162.75 கோடியாக உயர்ந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் இது ரூ.3,217.88 கோடியாக இருந்தது.

உரிமை வெளியீடு ஆகியவற்றால் நிறுவனத்தின் நிதி நிலை மேலும் வலுப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் நங்கினேனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சம்வர்தனா மதர்சன் 4-வது காலாண்டு லாபம் 23% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com