பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

டெக்ஸ்மாக்கோ ரயில் & பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 மே 2025, 4:09 pm

DIN

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வேகன்கள் எஃகு சுருள்கள், கொள்கலன்கள், ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும், ரோல்-ஆன் அல்லது ரோல்-ஆஃப் செயல்பாடுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவால் அமைச்சகம் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அதே வேளையில் சரக்கு நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது என்றார் டெக்ஸ்மாக்கோ ரயில் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான இந்திரஜித் முகர்ஜி.

மொத்த ஆர்டர் தற்போது ரூ.7,115 கோடியை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.