காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

News image

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

Updated On :16 நவம்பர் 2025, 5:59 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,703 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 269.9 கோடி டாலா் குறைந்து 68,703 கோடி டாலராக உள்ளது.

அக்டோபா் 31-ஆம் தேதியுடந் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 562.3 கோடி டாலா் குறைந்து 68,973 கோடி டாலராக இருந்தது.

நவம்பா் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 245.4 கோடி டாலா் குறைந்து 56,213.7 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 19.5 கோடி டாலா் குறைந்து 10,153.1 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 5.1 கோடி டாலா் குறைந்து 1,859.4 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் மாற்றமின்றி 477.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.