

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,470.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.35 மணியளவில் சென்செக்ஸ் 286.15 புள்ளிகள் அதிகரித்து 85,484.29 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89.00 புள்ளிகள் உயர்ந்து 26,141.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகின்றன.
சென்செக்ஸ் நிறுவனங்களில், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகியவை லாபம் ஈட்டிய நிறுவனங்களில் அடங்கும்.
இருப்பினும் ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.
இதையும் படிக்க | பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதீஷ் குமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.