

இந்திய பங்குச் சந்தை 3 நாள்கள் தொடர் சரிவுக்குப் பிறகு இன்று (நவ. 26) உயர்வுடன் வணிகமாகி வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 761 புள்ளிகள் உயர்ந்து 85,374.55 புள்ளிகளாகவும், நிஃப்டி 221 புள்ளிகள் உயர்ந்து 26,132 புள்ளிகளாகவும் வணிகமாகி வருகிறது.
அதாவது சென்செக்ஸ் 0.92% உயர்வுடனும் நிஃப்டி 0.96% உயர்வுடனும் வணிகமாகி வருகிறது. குறிப்பாக ஆயில், நிதி, ஸ்டீல், சுரங்கம், கட்டுமானம், ஆற்றல், சரக்கு போக்குவரத்து, வங்கி, ரியாலிட்டி, டெலிகாம் துறை பங்குகள் ஏற்றத்துடன் வணிகமாகி வருகின்றன. இதனால் 3 நாள்கள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உயர்வுக்கான காரணங்கள்
உக்ரைன் - ரஷியா இடையே 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கல் அபுதாபியில் ரஷிய அதிகாரிகளுடன் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவார்த்தை அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைந்ததாகவும் விரைவில் முன்னேற்றம் கிடைக்கும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச அளவுலான கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமையை விட 1% விலை குறைந்துள்ளது.
அமெரிக்கா - இந்தியா இடையிலான வணிக ஒப்பந்தத்தில் எந்தவித எதிர்மறையான நகர்வும் இல்லாமல் இருப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்திய பங்குச் சந்தை பக்கம் திருப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.