மகாராஷ்டிர வங்கி கடனளிப்பு 17% அதிகரிப்பு

அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிரா வங்கியின் கடனளிப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 16.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர வங்கி கடனளிப்பு 17% அதிகரிப்பு
Published on
Updated on
1 min read

புது தில்லி: அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிரா வங்கியின் கடனளிப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 16.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.2.54 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024 செப்டம்பர் 30-ல் மொத்த கடனளிப்பு ரூ.2.17 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது கடனளிப்பு 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட மொத்த வைப்பு நிதி 12.1 சதவீதம் உயர்ந்து ரூ.3.09 லட்சம் கோடியாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது ரூ.2.76 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.4.94 லட்சம் கோடியில் இருந்து 14.2 சதவீதம் உயர்ந்து ரூ.5.64 லட்சம் கோடியாக உள்ளது. கடனளிப்பு-வைப்புநிதி விகிதம் 71.7 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com