
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்ததால், இன்றைய வர்த்தகத்தில் அதன் 52 வார உச்சத்தை எட்டியது. ஜூன் 30, 2025க்குப் பிறகு முதல் முறையாக சென்செக்ஸ் 84,000 புள்ளிகளைத் கடந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், அக்டோபர் 1, 2024க்குப் பிறகு முதல் முறையாக நிஃப்டி குறியீடு 25,700 புள்ளிகளைத் கடந்தது. இன்று ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், எஃப்எம்சிஜி மற்றும் வங்கி குறியீடுகள் முன்னணி வகுத்தன.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 484.53 புள்ளிகள் உயர்ந்து 83,952.19 ஆகவும், நிஃப்டி 124.55 புள்ளிகள் உயர்ந்து 25,709.85 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.4% சரிந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் வங்கி குறியீடு மார்ச் 11, 2025 அன்று 47,853.95 என்ற குறைந்தபட்ச அளவிலிருந்து கிட்டத்தட்ட 10,000 புள்ளிகள் உயர்ந்து, இன்றைய இன்ட்ராடேவ அமர்வில் 57,830.20 புள்ளிகளுக்கு சென்று புதிய சாதனை உச்சத்தை படைத்தது.
இந்த வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி தலா 1.7 சதவிகிதம் உயர்ந்தன. அதே நேரத்தில் நிஃப்டி வங்கி குறியீடு 2 சதவிகிதம் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
துறைகளில் இன்று ஊடகம், ஐடி, உலோகம், பொதுத்துறை வங்கி குறியீடுகள் 0.5 முதல் 1% வரை சரிந்தன. அதே நேரத்தில் ஆட்டோ, வங்கி, சுகாதாரம், எஃப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள் 0.5 முதல் 1% வரை உயர்ந்தன.
நிஃப்டி-யில் ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், மேக்ஸ் ஹெல்த்கேர், ஐடிசி, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் விப்ரோ, இன்ஃபோசிஸ், எடர்னல், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா ஆகியவை சரிந்தும் முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் பெயிண்ட் பங்குகள் 4% வரை உயர்ந்தன. 2-வது காலாண்டில் இன்ஃபோசிஸ் ஒருங்கிணைந்த லாபம் 13% உயர்ந்த போதிலும் அதன் பங்குகள் 2% சரிந்தன. விப்ரோ நிறுவனத்தின் 2-வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 13% உயர்ந்த போதிலும் அதன் பங்குகள் விலை 5% சரிந்தன. ஜீ என்டர்டெயின்மென்ட் 2-வது காலாண்டு நிகர லாபம் 65.3% குறைந்த பிறகு, அதன் பங்குகள் 3% சரிந்தன.
2-வது காலாண்டு வருவாய் 26.4% உயர்ந்த போதிலும் ஜேஎஸ்டபிள்யூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் கிட்டத்தட்ட 4% சரிந்தன.
எஸ்ஜேவி நிறுவனத்திடமிருந்து ரூ.696.50 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றதை அடுத்து கேபிஐ கிரீன் பங்குகள் 4% உயர்ந்தன. பிஎன்பி கில்ட்ஸ் 2-வது காலாண்டில் இழப்புகள் பதிவ செய்ததை அடுத்து அதன் பங்குகள் 7% சரிந்தன. ரூ.27 கோடி மதிப்புள்ள ஆர்டரை வென்ற போதிலும் சப்ரோஸ் பங்குகள் 5.6% சரிந்தன.
ராடிகோ கைதான், முத்தூட் ஃபைனான்ஸ், டிவிஎஸ் மோட்டார், எம்&எம் ஃபைனான்சியல், நெஸ்லே இந்தியா, எச்பிஎல் இன்ஜினியரிங், அப்பல்லோ மருத்துவமனைகள், மாருதி சுசுகி, எஸ்பிஐ உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் அதன் 52 வார உச்சத்தை எட்டியது.
ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.92 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு ரூ.60.50 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: 1,937 அசோக் லேலண்ட் பேருந்துகளை வாங்கும் தமிழக அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.