அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 409.83 புள்ளிகள் உயர்ந்து 80,567.71 புள்ளிகளாகவும், 50-பங்களை கொண்ட நிஃப்டி 135.45 புள்ளிகள் உயர்ந்து 24,715.05 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2025, 5:19 pm IST

மும்பை: உலோகப் பங்குகளின் ஏற்றம் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த அதீத நம்பிக்கையால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 80,671.28 என்ற அதிகபட்ச அளவு சென்ற பிறகு 80,004.60 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது.

ஏற்றம் மற்றும் சரிவுக்கு இடையில் ஊசலாடிய பிறகு, 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 409.83 புள்ளிகள் உயர்ந்து 80,567.71 புள்ளிகளாகவும், 50-பங்களை கொண்ட நிஃப்டி 135.45 புள்ளிகள் உயர்ந்து 24,715.05 ஆக நிலைபெற்றது.

வரி விகிதங்களை 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதமாகக் குறைப்பது குறித்து விவாதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு நாட்கள் புதுதில்லியில் கூடி முடிவு எடுக்கும்.

இன்றைய வர்த்தகத்தில் 3,138 பங்குகள் வர்த்தகமான நிலையில் 2,087 பங்குகள் உயர்ந்தும் 960 பங்குகள் சரிந்தும் 91 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல் 5.90 சதவிகிதம் அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில் டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா, ஐடிசி, எடர்னல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் டிரென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் இன்ஃபோசிஸ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

ஜிஎஸ்டி குறித்த பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்திய பங்குச் சந்தைகள் கலவையான தொடக்கத்திற்குப் பிறகு உயர்வுடன் முடிவடைந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி உயர்ந்தும், அதே நேரத்தில் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமானது.

ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் உயர்ந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாயன்று) ரூ.1,159.48 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.52 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.09 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.