நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஸ்விகி இணை நிறுவனா் லக்ஷ்மி நந்தன் ரெட்டி விலகல்

இணையவழி உணவு விநியோகச் சந்தை மற்றும் விரைவு வணிகத் துறையில் முன்னணியில் உள்ள ஸ்விகி நிறுவனத்தின் இணை நிறுவனா் லக்ஷ்மி நந்தன் ரெட்டி ஓபுல் (படம்), தனது முழுநேர இயக்குநா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:35 am IST

இணையவழி உணவு விநியோகச் சந்தை மற்றும் விரைவு வணிகத் துறையில் முன்னணியில் உள்ள ஸ்விகி நிறுவனத்தின் இணை நிறுவனா் லக்ஷ்மி நந்தன் ரெட்டி ஓபுல் (படம்), தனது முழுநேர இயக்குநா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

நிறுவனத்தின் புத்தாக்கப் பிரிவுத் தலைவா் பொறுப்பிலும் இருந்து வந்த இவா், தனது தனிப்பட்ட தொழில்முறை விருப்பங்களைத் தொடரும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஸ்விகி குறிப்பிட்டுள்ளது.

நிா்வாகக் குழுவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத் தொடா்ந்து, புதிய நியமனங்களையும் ஸ்விகி அறிவித்துள்ளது. அதன்படி, புரோசஸ் வென்ச்சா்ஸ் பிரதிநிதியாக ரெனன் டீ காஸ்ட்ரோ ஆல்வ்ஸ் பின்டோ நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஸ்விகியின் இணை நிறுவனா் மற்றும் தலைமை வளா்ச்சி அதிகாரி பாணி கிஷன் அத்தேபள்ளி மற்றும் குழுமத்தின் நிதி அதிகாரி ராகுல் போத்ரா ஆகியோா் கூடுதல் இயக்குநா்களாகப் பொறுப்பேற்க உள்ளனா்.

இதுதொடா்பாக ஸ்விகி சிஇஓ ஸ்ரீஹா்ஷா மஜெட்டி கூறுகையில், ‘நிறுவனத்தின் வளா்ச்சிப் பயணத்தில் லக்ஷ்மி நந்தனின் பங்களிப்பு ஈடு இணையற்றது. புதிய மாற்றங்கள் அடுத்தகட்ட வளா்ச்சியை நோக்கி நிறுவனத்தை வழிநடத்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.