அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையில் மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையில் எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது.
புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,189.51 புள்ளிகள் உயர்ந்து 78,237.08 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 366.40 புள்ளிகள் உயர்ந்து 24,209.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ. 9 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்செக்ஸில் இண்டிகோ, அல்ட்ராடெக் சிமெண்ட், எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ், இஸ்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் பின்செர்வ் ஆகியவை 2 முதல் 4 சதவிகிதம் வரை லாபம் ஈட்டின. இவற்றுள் ஐசிஐசிஐ வங்கி மட்டும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையால் கச்சா எண்ணெய் விலை மிகப் பெரியவைச் சந்தித்திருக்கிறது. நேற்றிரவு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களில் இருந்து 95 டாலராகவும், டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை 91 டாலராகவும் சரிந்தது.
Summary
Indian stock markets rallied on Wednesday, with the Sensex and Nifty rising over 1.5% each, driven by easing oil prices, renewed hopes of US-Iran peace talks and other factors.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்எஸ்சிஐ மறுசீரமைப்பு, பருவமழை அச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!





