மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, 236.2 கோடி டாலர் அதிகரித்து, 70,330.8 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

News image

~

Updated On :24 ஏப்ரல் 2026, 2:27 pm

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 17ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 236.2 கோடி டாலர் அதிகரித்து, 70,330.8 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 382.5 கோடி டாலர் அதிகரித்து 70,094.6 கோடி டாலராக இருந்தது.

மேற்கு ஆசிய மோதல் தொடங்குவதற்கு முன்பு, 2026 பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவு உச்சமாக 72,849.4 கோடி டாலராக இருந்தது. பிப்ரவரி 28, 2026 தொடங்கிய மேற்கு ஆசிய மோதல் தீவிரமடைந்ததன் காரணமாக, கையிருப்பில் சரிவு காணப்பட்டது.

அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மையால், ரூபாயின் மதிப்பு மீதும் அழுத்தம் ஏற்படுத்தியது. இதனால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் ரிசர்வ் வங்கி தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஏப்ரல் 17ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான, அந்நிய நாணய சொத்துகள் 148.1 கோடி டாலர் அதிகரித்து 55,746.3 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 79 கோடி டாலர் அதிகரித்து 12,213.3 கோடி டாலராக உள்ளது.

சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு நிலை 1.4 கோடி டாலர் அதிகரித்து 487 கோடி டாலராக உயர்ந்ததாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Summary

India's forex reserves jumped by USD 2.362 billion to USD 703.308 billion during the week ended April 17.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.