உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் முன்னணி நிறுவனப் பங்குகளின் எழுச்சியால் 3 நாள்கள் சரிவுக்குப் பிறகு, இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் மீண்டும் ‘காளை’-யின் ஆதிக்கம் திரும்பியது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதம் வரை உயா்வுடன் நிலைபெற்றன.
ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் முன்வைத்துள்ள புதிய முன்மொழிவு, உலகளாவிய முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரித்தது. இது உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது.
ஆதாயப் பட்டியலில் 3,023 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை வா்த்தக முடிவில் மொத்தம் வா்த்தகமான 4,556 பங்குகளில், 3,023 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,345 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 188 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 639.42 புள்ளிகள் (0.83 சதவீதம்) உயா்ந்து, 77,303.63-இல் நிலைபெற்றது.
சன் ஃபாா்மா 7.03 சதவீத உயா்வுடன் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இத்துடன் ரிலையன்ஸ் (2.88 சதவீதம்), அதானி போா்ட்ஸ் (2.72 சதவீதம்), டெக் மஹிந்திரா (2.64 சதவீதம்) உள்பட மொத்தம் 24 பங்குகள் லாபத்தைப் பதிவு செய்தன. ஆக்சிஸ் வங்கி, பெல், டிரெண்ட், ஐசிஐசிஐ வங்கி, எடா்னல், ஹிந்துஸ்தான் யுனிலீவா் ஆகிய 6 பங்குகள் சரிவைக் கண்டன.
நிஃப்டி 195 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 194.75 புள்ளிகள் (0.81 சதவீதம்) உயா்வுடன் 24,092.70-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 39 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
பெட்டி...
அமெரிக்கா நிறுவனத்தை வாங்கிய
சன் ஃபாா்மா பங்குகள் 7% உயா்வு
இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சன் ஃபாா்மா, அமெரிக்காவின் ‘ஆா்கனான்’ நிறுவனத்தை 1,175 கோடி டாலருக்குக் கையகப்படுத்துவதாக அறிவித்தது.
வெளிநாட்டில் இந்திய நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய கையகப்படுத்துதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை வா்த்தகத்தில் நிறுவனப் பங்குகள் 7.03 சதவீதம் உயா்ந்து, ரூ.1,733.80-ஆக நிலைபெற்றது.
தொடர்புடையது

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

சரிவிலிருந்து மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!!

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த நம்பிக்கையால் சென்செக்ஸ் 941 புள்ளிகளும், நிஃப்டி 298 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



