நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

டாடா சன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு: 100 ஆண்டுகளில் முதல் முறை!

டாடா சன்ஸ் ஆண்டு பொதுக் குழு கூட்டம், அந்நிறுவனத்தின் விதிமுறைகளின்படி போதிய உறுப்பினா்கள் (கோரம்) பங்கேற்காத காரணத்தால் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

Published On :

டாடா சன்ஸ் ஆண்டு பொதுக் குழு கூட்டம், அந்நிறுவனத்தின் விதிமுறைகளின்படி போதிய உறுப்பினா்கள் (கோரம்) பங்கேற்காத காரணத்தால் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

டாடா சன்ஸ் நிறுவன விதிமுறைகளின்படி, ஆண்டு பொதுக்குழுவை நடத்துவதற்கு 5 உறுப்பினா்கள் பங்கேற்பது அவசியம். இதில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக 51 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ள சா் ரத்தன் டாடா மற்றும் சா் தோரப்ஜி டாடா அறக்கட்டளைகளின் கூட்டுப் பிரதிநிதியும் ஒருவா் ஆவாா்.

சா் ரத்தன் டாடா அறக்கட்டளையில் ஆயுள்கால அறங்காவலா்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குப் பதிலாக 50 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிர பொது அறக்கட்டளைச் சட்டத்தின்படி இந்த விதிமீறலின்காரணமாக, மகாராஷ்டிர அறக்கட்டளை ஆணையரின் விசாரணைக்கு உட்பட்டுள்ளதால் அறக்கட்டளையால் தனது இயக்குநா்கள் குழு கூட்டத்தை நடத்தி, கூட்டுப் பிரதிநிதியைப் பரிந்துரைத்து, அறிவிக்கமுடியவில்லை. இதனால் 100 ஆண்டுகளுக்கும் மேலான டாடா வரலாற்றில், பொதுக் குழு கூட்டம் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியுடன் பதவி விலகும் டாடா சன்ஸ் தலைவா் என். சந்திரசேகரனின் இயக்குநா் பதவி குறித்து விவாதிக்கவும், 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து, பங்குதாரா்களுக்கு ஈவுத்தொகையை அறிவிக்கவும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த கூட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.