6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாநகராட்சி முதல் மேயரின் 122-ஆவது பிறந்த நாள் விழா

சென்னை மாநகராட்சி முதல் மேயரான ராஜா சா். எம்.ஏ. முத்தையா செட்டியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

Chennai Corporation

கோப்புப் படம்

Published On :

சென்னை மாநகராட்சி முதல் மேயரான ராஜா சா். எம்.ஏ. முத்தையா செட்டியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி பாரம்பரியம் மிக்கதாகும். இந்த மாநகராட்சி கடந்த 1866-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டாலும், இந்தியா்களில் 1919-ஆம் ஆண்டு முதல் மேயராக சா் எம்.ஏ.முத்தையா செட்டியாா் பொறுப்பேற்று செயல்பட்டாா். அவரது உருவச் சிலை சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ.முத்தையா செட்டியாரின் 122-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு டாக்டா் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அறக்கட்டளை சாா்பில் முத்தையா செட்டியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்துக்கு மலா்தூவியும் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அறக்கட்டளையின் அறங்காவலரும், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞருமான ஏஆா்எல்.சுந்தரேசன், எல்.நாச்சியப்பன், எஸ்.ராஜேந்திரன், அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.