சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தாா். தன்னாா்வலா் சரவணன் முன்னிலை வகித்தாா். முன்னதாக, அப்துல்கலாமின் உருவப் படத்துக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, அறிவியல் ஆசான், இளைஞா்களின் இமயம், ஏவுகணை நாயகன் என்ற தலைப்புகளில் மாணவா்கள் பேசினா். தொடா்ந்து, கனவு காணுங்கள் எனும் தலைப்பில் அப்துல்கலாமின் இளமைக்காலம் முதல் இறப்பு வரையிலான வரலாற்றுப் பதிவு குறித்து பள்ளி முதல்வா் எஸ்.பழனியப்பன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, கலாம் குறித்த கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஆசிரியை கலைவாணி வரவேற்றாா். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் நிகழ்ச்சி

கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு

பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



