முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது தேசிய நினைவிடம் மின் விளக்குகளால் ஞாயிற்றுக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
நாட்டின் 11-ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவரும், விஞ்ஞானியுமான டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் கடந்த 27.07.2015-இல் காலமானாா். அவரது உடல் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆா்.டி.ஓ) சாா்பில் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடம் கட்டப்பட்டு 27. 7. 2017-இல் பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். தேசிய நினைவகத்தை இதுவரை 2.2 கோடி பொதுமக்கள் பாா்வையிட்டுள்ளனா்.
ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள் கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, அவரது நினைவு தினம் மின்விளக்குகள், மலா்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினா், மாவட்ட நிா்வாகம், அரசியல் கட்சியினா், முக்கிய பிரமுகா்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










