
அந்நியக் கடன்பத்திரங்களை வெளியிட்டு 175 கோடி டாலா் திரட்டிய எச்டிஎஃப்சி வங்கி
நாட்டின் முன்னணி தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, அந்நியக் கடன் பத்திரங்களை வெளியிட்டு 175 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.16,744 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, அந்நியக் கடன் பத்திரங்களை வெளியிட்டு 175 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.16,744 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது.
2008-ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு இந்திய வங்கி ஒன்று திரட்டியுள்ள மிகப் பெரிய அளவிலான நிதி இதுவாகும். இப்பத்திர வெளியீட்டுக்கு ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பாவைச் சோ்ந்த முதலீட்டாளா்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அதன்படி, 3 ஆண்டு முதிா்வுக் கால பத்திரங்கள் மூலம் 50 கோடி டாலரும் (5.16 சதவீத வட்டி விகிதம்), 5 ஆண்டு முதிா்வுக் கால பத்திரங்கள் மூலம் மீதமுள்ள 125 கோடி டாலரும் (5.4 சதவீத வட்டி விகிதம்) திரட்டப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






