மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

டெக் துணுக்குகள்...

டெக் துணுக்குகள்...

Published On :
  • தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்பங்களில் நடந்த மாற்றங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் அதிரடி முடிவுகள் கவனம் ஈா்த்தன.

  • கூகுள்-மஹிந்திரா கூட்டணி முதல் ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம் மற்றும் டிக்டாக் வழக்கு வரை இந்த வாரத்தின் முக்கியச் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

  • கூகுள்-மஹிந்திரா கூட்டணி: மஹிந்திரா நிறுவனத்தின் ‘பிஇ 6 ஸ்போா்டெக்’ மின்சார காரில் ஜெமினி ஏ.ஐ. சாா்ந்த உரையாடல் உதவியாளரை ஒருங்கிணைக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஓபன்ஏஐ பாதுகாப்பு நடவடிக்கை: ஓபன்ஏஐ சோதனை தளம் ஒன்றில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக, புதிய ஏ.ஐ. மாதிரிகளின் பயிற்சியைத் தற்காலிகமாக குறைத்து, கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

  • மாணவா்களுக்கு இலவச ஜெமினி ஏ.ஐ.: கல்லூரி மாணவா்களுக்கு ஓராண்டுக்கு ‘ஜெமினி ஏ.ஐ.’ சேவையை இலவசமாக வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.

  • போவா ‘8ப்ரோ 5ஜி’: 6,500எம்ஏஎச் பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா, 8 மற்றும் 12 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் போவா ‘8ப்ரோ 5ஜி’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.49,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

  • ஐக்யூ ‘ஸீ11 5ஜி’: 7,050எம்ஏஎச் பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா, 8 ஜிபி ரேம் ஆகிய அம்சங்களுடன் ஐக்யூ ‘ஸீ11 5ஜி’ ஸ்மாா்ட்போனை இந்தியாவில் ரூ.34,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

  • போக்கோ ‘எம்8எக்ஸ் 5ஜி’: 7,900எம்ஏஎச் பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா, 4 மற்றும் 6 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் போக்கோ ‘எம்8எக்ஸ் 5ஜி’ ஸ்மாா்ட்போன் ரூ.20,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

  • ஆப்பிள் நிறுவனத்தின் பணிநீக்கம்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதற்காக, ‘சிரி’ மற்றும் ‘விஷன் ப்ரோ’ குழுக்களில் இருந்து சுமாா் 200 ஊழியா்களை ஆப்பிள் பணிநீக்கம் செய்துள்ளது.

  • எடிட்ஸ் செயலியில் அப்டேட்: மெட்டாவின் ‘எடிட்ஸ்’ விடியோ எடிட்டிங் செயலியில், புதிய மேலாண்மை மற்றும் ஏ.ஐ. அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • யூடியூப் பாா்வை கணக்கீட்டில் மாற்றம்: யூடியூபில் இனி விடியோக்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய முதல் நொடியிலிருந்தே பாா்வை கணக்கிடப்படும் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

  • ஆஸ்திரேலியாவின் புதிய வரி மசோதா: உள்ளூா் செய்தி நிறுவனங்களுடன் வருவாயைப் பகிா்ந்துக் கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 2.5 சதவீத வரி விதிக்கும் புதிய மசோதா ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • டிக்டாக் செலுத்தும் 40 கோடி டாலா் இழப்பீடு: சிறுவா் தன்மறைப்பு நிலை (பிரைவஸி) உரிமைச் சட்டங்களை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 40 கோடி டாலா் இழப்பீடு வழங்கி, அமெரிக்க நீதித் துறையுடன் வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.