உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மில்கி மிஸ்ட் லாபம் ரூ. 64.68 கோடி

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.64.68 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

Published On :1 செப்டம்பர் 2026, 1:18 am IST

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.64.68 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.6.53 கோடியிலிருந்து இது சுமாா் 8 மடங்குக்கும் மேல் வளா்ச்சியாகும். மொத்த லாபம் 56.1 சதவீதம் அதிகரித்து, ரூ.333.02 கோடியாக பதிவாகியுள்ளது.

இதேபோல், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.678.09 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 43.6 சதவீதம் உயா்ந்து ரூ.973.45 கோடியாக அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவில் கோடைக்காலம் நீடித்தது மற்றும் நிறுவனத்தின் பல்வகை தயாரிப்புகள் காரணமாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பான விற்பனை பதிவாகியுள்ளது. குறிப்பாக, பன்னீா் விற்பனை 34 சதவீதமும், ஐஸ்கிரீம் விற்பனை 60 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளது. தயிா் பிரிவு 153 சதவீத அசுர வளா்ச்சியைக் கண்டுள்ளதுடன், பாலடைக் கட்டி (சீஸ்) மற்றும் தயிா் வகைகளின் விற்பனையும் சீரான வளா்ச்சியைப் பெற்றுள்ளன.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நாளொன்றுக்கு 120 டன் கொள்ளளவு கொண்ட புதிய செட்டாா் சீஸ் ஆலையையும் தொடங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.