பஞ்சாப் நேஷனல் வங்கியின் 2வது காலாண்டு லாபம் 13% உயர்வு!
பஞ்சாப் நேஷனல் வங்கி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2 வது காலாண்டில், அதன் நிகர லாபம் 13 சதவீதம் அதிகரிப்பு.

பஞ்சாப் நேஷனல் வங்கி - file photo
புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பு நிதியாண்டின் 2 வது காலாண்டில், அதன் நிகர லாபம் 13 சதவீதம் அதிகரித்து ரூ. 5,532 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. முக்கிய வருவாயில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் வாராக் கடன் குறைவு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
நாட்டின் 2 வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 4,904 கோடி லாபத்தை பதிவு செய்தது. வங்கியின் மொத்த வருவாய், கடந்த ஆண்டின் 2 வது காலாண்டிலிருந்த ரூ. 36,214 கோடியிலிருந்து, இந்த ஆண்டின் 2 வது காலாண்டில் ரூ. 38,185 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் 2 வது காலாண்டில், வட்டி வருவாய் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 34,585 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 31,872 கோடியாக இருந்தது. அதே போல், நிகர வட்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து, கடந்த நிதியாண்டின் 2 வது காலாண்டிலிருந்த ரூ. 10,469 கோடியிலிருந்து, தற்போது ரூ. 11,601 கோடியாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், செயல்பாட்டு லாபம் 4 சதவீதம் மட்டுமே அதிகரித்து, கடந்த ஆண்டின் இதே காலாண்டிலிருந்த ரூ. 7,227 கோடியிலிருந்து ரூ. 7,532 கோடியாக உயர்ந்துள்ளது.
முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அசோக் சந்திரா, கடந்த ஆண்டின் 2 வது காலாண்டில் ரூ. 1,769 கோடியாக இருந்த கருவூல வருவாய், இந்த ஆண்டின் 2 வது காலாண்டில் ரூ. 1,000 கோடி குறைந்து, ரூ. 753 கோடியாக உள்ளதாக தெரிவித்தார்.
Summary
Punjab National Bank (PNB) on Friday reported a 13 per cent rise in net profit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


