தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

மத்திய பட்ஜெட் : சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று (பிப். 1) சரிவுடன் தொடங்கியது.

கோப்புப் படம்

Published On :

2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று (பிப். 1) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 296 புள்ளிகளுடனும் நிஃப்டி 122 புள்ளிகளுடன் சரிவுடன் தொடங்கின.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் சரிந்து 82,293 புள்ளிகளுடன் வணிகமாகி வருகின்றன.

இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டி எண் நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து 25,312 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வணிகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.