சென்செக்ஸ் 40.28 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 18.70 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!

சென்செக்ஸ் 40.28 புள்ளிகள் சரிந்து 84,233.64 ஆகவும், நிஃப்டி 18.70 புள்ளிகள் உயர்ந்து 25,953.85 ஆக நிலைபெற்றது.
பங்குச் சந்தை | கோப்புப் படம்
பங்குச் சந்தை | கோப்புப் படம்
Updated on
2 min read

மும்பை: இன்றைய வர்த்தக அமர்வில், ஆட்டோ, பார்மா மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகளின் உயர்ந்த நிலையில், ஐடி பங்குகளின் ஏற்பட்ட பலவீனத்தால், முக்கிய குறியீடுகள் பெரும்பாலும் மாறாமல் சமமாக முடிவடைந்தன.

இந்திய பங்குச் சந்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கி, நிஃப்டி 26,000 புள்ளிகள் என்ற அளவுக்கு சென்றது. இருப்பினும், அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கைக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், பிற்பகுதியில் நிஃப்டி ஒரு குறுகிய வரம்பிற்குள் வர்த்தகமானது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 40.28 புள்ளிகள் சரிந்து 84,233.64 ஆகவும், நிஃப்டி 18.70 புள்ளிகள் உயர்ந்து 25,953.85 ஆக நிலைபெற்றது.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சமமாக முடிவடைந்தன.

துறை ரீதியாக ஆட்டோ குறியீடு 1.3% உயர்ந்தும், பொதுதுறை வங்கி மற்றும் மருந்து நிறுவனங்கள் தலா 1% உயர்ந்தும், நுகர்வோர் சாதனங்கள் குறியீடு 0.5% உயர்ந்த நிலையில் ஐடி குறியீடு 1.7% சரிந்தன.

சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், எடர்னல், ஐ.டி.சி, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. மறுபுறம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசுகி இந்தியா, இண்டிகோ, டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மாசூட்டிகல்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகியவை உயர்ந்தன.

நிஃப்டி-யில் ஐஷர் மோட்டார்ஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், மேக்ஸ் ஹெல்த்கேர், எஸ்பிஐ, மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்தன மறுபுறம் கோல் இந்தியா, டிசிஎஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், எடர்னல், இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.

பங்குச் சந்தை சார்ந்த நடவடிக்கைகளில், ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 3வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 21% அதிகரித்ததால் அதன் பங்குகள் 6.5% அதிகரித்தன. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 3வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 21% அதிகரித்ததால், அதன் பங்குகள் 2.6% உயர்ந்தன.

அப்போலோ மருத்துவமனைகள் நிறுவனத்தின் 3வது காலாண்டில் ஒருங்கிணைந்த லாபம் 17% அதிகரித்ததால், அதன் பங்குகள் 4% உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் வணிக வாகன நிறுவனத்தின் 3வது காலாண்டு லாபம் 35% அதிகரித்ததால், அதன் பங்குகள் 3% உயர்ந்தன. குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3வது காலாண்டு லாபம் குறைந்ததால், அதன் பங்குகள் 2% சரிந்தன.

எம்ஐசி எலெக்ட்ரானிக்ஸ் பங்குகள் 2% உயர்ந்த நிலையில் ரூ.122.58 கோடி அளவில் அவன்டெல் நிறுவனம் ஆர்டர் கையகப்படுத்தியதால் அதன் பங்குகள் இன்று 2 சதவீதம் உயர்ந்தன.

ஐஷர் மோட்டார்ஸ், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், ஃபோர்ஸ் மோட்டார்ஸ், அசோக் லேலேண்ட், எஸ்பிஐ, இண்டஸ் டவர்ஸ், ஏபிஎல் அப்பல்லோ, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், மேக்ஸ் ஃபைனான்சியல், செயில், டோரண்ட் பார்மா, பாரத் ஃபோர்ஜ், நைகா, டைட்டன் கம்பெனி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எம்ஆர்பிஎல் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஹாங்காங் ஹாங் செங் மற்றும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்வுடன் முடிவடைந்த நிலையில் தேசிய அறக்கட்டளை தினத்தை முன்னிட்டு ஜப்பானிய சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒண்றுக்கு 1.44 சதவீதம் உயர்ந்து 69.78 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

Summary

Benchmark stock indices Sensex and Nifty closed on a flat note in a choppy session on Wednesday as gains in PSU banks and auto shares were offset by losses in IT stocks.

பங்குச் சந்தை | கோப்புப் படம்
ரிலையன்ஸ் வசமானது ‘மன்னா’ பிராண்ட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com