

பங்குச் சந்தைகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும்(ஜன. 6) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,331.14 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 385.72 புள்ளிகள் குறைந்து 85,053.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83.00 புள்ளிகள் குறைந்து 26,167.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபமடைந்தும் டிரென்ட், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் பிவி ஆகியவை அதிக இழப்பை சந்தித்தும் வருகின்றன.
இதேபோல், நிஃப்டியில், எச்டிஎஃப்சி லைஃப், ஹிண்டால்கோ, அப்பல்லோ மருத்துவமனைகள் அதிக லாபமும் டிரென்ட், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் பிவி ஆகியவை அதிக இழப்பையும் சந்தித்து வருகின்றன.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் நிலையாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
துறைகளில், நிஃப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு 1.36 சதவீதம் சரிந்தது. உலோகக் குறியீடு 0.95 சதவீதம் உயர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.