

பங்குச் சந்தைகள் இன்று(ஜன. 30, வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. ஐடி மற்றும் உலோகக் குறியீடுகள் அதிக சரிவைச் சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,947.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 493.29 புள்ளிகள் குறைந்து 82,073.08 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153.90 புள்ளிகள் குறைந்து 25,265.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்று காலை சென்செக்ஸ் பங்குகளில் டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
மறுபுறம் ஐடிசி, எஸ்பிஐ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவை 0.67 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமாகின.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.08 சதவீதம் சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.42 சதவீதம் உயர்ந்தது.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி மெட்டல் குறியீடு 3.5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து பெரும் இழப்பைச் சந்தித்தது. நிஃப்டி ஐடி பங்குகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகின்றன.
பிப். 1 ஆம் தேதி 2026- 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி அன்று பங்குச்சந்தைகள் வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.