இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,680 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த 2- ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 980.9 கோடி டாலா் குறைந்து 68,680 கோடி டாலராக உள்ளது.
டிச. 26- ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அது 329.3 கோடி டாலா் உயா்ந்து 69,661 கோடி டாலராக இருந்தது.
ஜனவரி 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 762.2 கோடி டாலா் குறைந்து 55,199 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 205.8 கோடி டாலா் குறைந்து 11,126.2 கோடி டாலராக உள்ளது.
சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 2.5 கோடி டாலா் குறைந்து 1,877.8 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 10.5 கோடி டாலா் குறைந்து 477.1 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,235 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,623 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,515 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 66,693 கோடி டாலராக சரிவு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



