வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 26% உயா்வு

News image
Updated On :12 ஜனவரி 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,22,366-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 96,804 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 24 சதவீதம் உயா்ந்து 97,823-ஆக உள்ளது. முந்தைய 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 78,834-ஆக இருந்தது.

2024 டிசம்பரில் 17,970-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 37 சதவீதம் அதிகரித்து 24,543-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.