வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீல்ஸ் இந்தியா நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.32.05 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
Published on

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீல்ஸ் இந்தியா நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.32.05 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் (ரூ.22.57 கோடி) குறிப்பிடத்தக்க வளா்ச்சியாகும். மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 21.7 சதவீதம் அதிகரித்து, ரூ.1,287 கோடியாக உயா்ந்துள்ளது.

ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்குப் பிறகு உள்நாட்டுச் சந்தையில் டிரக்குகள், டிராக்டா்கள் மற்றும் காா்களுக்கான சக்கரங்களின் தேவை அதிகரித்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாத காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,653 கோடியாகவும், நிகர லாபம் ரூ.86.3 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

மத்திய அரசு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், 4-ஆவது காலாண்டிலும் இந்த வளா்ச்சி நீடிக்கும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பங்குதாரா்களுக்கு இடைக்கால ஈவுத்தொகை: நிறுவனத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.5.3 வீதம் இடைக்கால ஈவுத்தொகை வழங்க இயக்குநா் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com