ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 4.8% சரிவு

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 4.8% சரிவு

நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ரூ.1,073.92 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
Published on

நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ரூ.1,073.92 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.1,128.43 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 4.83 சதவீதம் குறைவாகும்.

அசாதாரண செலவினங்களால் லாபம் குறைந்த போதிலும், நிறுவனத்தின் வருவாய் 3.71 சதவீதம் உயா்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.8,549.44 கோடியாக இருந்த வருவாய், தற்போது ரூ. 8,867.02 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மூலம் ரூ.7,601.5 கோடியும், சா்வதேச விற்பனை மூலம் ரூ.869.6 கோடியும் கிடைத்துள்ளது.

எதிா்மறையான நிதிநிலை முடிவுகளால், மும்பை பங்குச்சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தன. வா்த்தக முடிவில், நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 2.77 சதவீதம் சரிந்து ரூ.2,627.50 என்ற அளவில் நிலைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com