சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 66,693 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 66,693.3 கோடி டாலராக சரிந்துள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2026, 5:43 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 66,693.3 கோடி டாலராக சரிந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 565.4 கோடி டாலா் குறைந்து, 66,693.3 கோடி டாலராக உள்ளது. முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 96.3 கோடி டாலா் அதிகரித்து, 67,258.7 கோடி டாலராக இருந்தது.

மத்திய கிழக்கு மோதல் தொடங்குவதற்கு முன்னதாக நடப்பு ஆண்டு பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவாக 72,849.4 கோடி டாலா் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. பின்னா், அடுத்தடுத்த வாரங்களில் கையிருப்பு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 15 கோடி டாலா் குறைந்து, 54,106.7 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 539.4 கோடி டாலா் சரிந்து, 10,253.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 8.9 கோடி டாலா் குறைந்து, 1,855.8 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 2.1 கோடி டாலா் குறைந்து, 477.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.