FOLLOW US

ON GOOGLE DISCOVER

கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டாம்! பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.179க்கு ஐந்து மாத பிளான்!

ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்றால் பிஎஸ்என்எல் வழங்கும் 5 மாதத்துக்கான பேக் சிறந்த வழி

News image

பிஎஸ்என்எல் பிளான் - From social media

Updated On :10 ஜூலை 2026, 2:55 pm IST

ஒவ்வொரு மாதமும் ரூ.250 அல்லது ரூ.300 அல்லது 350 என செலவிட்டு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.179 என்ற செலவில் 5 மாதத்துக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்யும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே வெவ்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சேவை பெற்று வருபவர்களும், பிஎஸ்என்எல் -க்கு மாறும் வகையில் இந்த புதிய பேக் அறிமுகமாகியிருக்கிறது.

ரூ.897 திட்டத்தின் முழு விவரம்

  • பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.897 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 165 நாள்கள் வேலிடிட்டி.

  • அன்லிமிடட் லோக்கல் அழைப்புகள்

  • எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களும்

  • மொத்தமாக 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

  • இதனுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

இதில் இருக்கும் வேலிடிட்டியை சற்று மாற்றி, டேட்டா வேண்டும் என்றாலும் அதற்கும் ஒரு பிளான் இருக்கிறது.

அதுதான் ரூ.997 பிளான்!

  • முந்தைய திட்டத்தைப் போல 165 நாள்களுக்குப் பதில் 150 நாள்கள் மட்டுமே வேலிடிட்டி. ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

  • இதனைக் கணக்கிட்டால் 150 நாள்களுக்கு 300 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா முடிந்துவிட்டாலும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா திட்டமும் இருக்கிறது.

  • இதனுடன் அன்லிமிடட் லோக்கல் அழைப்புகள்

  • எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களும் கிடைக்கின்றன.

  • மேலும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

இந்த திட்டத்தின்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ரூ.199 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எனவே, டேட்டா வேண்டுமென்றால் இரண்டாவது திட்டத்தையும் வேலிடிட்டி வேண்டுமென்றால் முதல் திட்டத்தையும் பரிசீலிக்கலாம்.

Summary

No need to recharge every month! BSNL offers a five-month plan for ₹179!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.