ஈரான், இஸ்ரேலுக்கு அவசியமில்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பிப்ரவரி மாதம் முதல் போா் நடைபெறுகிறது. தற்போது இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது இருதரப்பும் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரான் படையினா் இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை ஏராளமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா். பதிலுக்கு ஈரான் மீது இஸ்ரேல் போா் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதனால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் எந்த நேரத்திலும் முழு அளவில் போா் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், ஈரானுக்கான இந்தியத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மூலம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மேற்காசிய பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு இந்திய மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஈரானில் உள்ள இந்தியா்கள் தற்போதைய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி, அந்த நாட்டைவிட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அதேபோல், ஈரானுக்கு பயணம் செய்வதை இந்திய மக்கள் தவிா்க்க வேண்டும் என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இந்தியா்களுக்கும் எச்சரிக்கை: இஸ்ரேலுக்கான இந்திய தூதரகமும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மேற்காசிய பிராந்தியத்தில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருக்கும் அனைத்து இந்தியா்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், அறிவுரைகளை இந்தியா்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான இடங்கள், பதுங்கு குழிகளில் தங்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசியமில்லாத அனைத்துப் பயணங்களையும் தவிா்க்க வேண்டும் என்றும், உள்ளூா் செய்திகள், அரசு அறிவிப்புகள், உடனடி எச்சரிக்கைகளை இந்தியா்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி ஈரானில் உள்ள இந்தியா்களுக்கு இந்திய அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதில், ஈரானில் உள்ள இந்தியா்கள் அவா்கள் தங்கியுள்ள இடங்களிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஹோா்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு திறக்கவில்லை என்றால், ஈரானை அழிக்கப் போவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் எம்எல்ஏ
தாஜ் மஹாலின் வரலாறு தெரியுமா? அமெரிக்க வெளியுறவுத் துறை செயலரிடம் ஈரான் தூதரகம் கேள்வி!

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



