நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

காலாண்டு வருவாய் எதிரொலி: டிசிஎஸ் பங்குகள் 4% உயர்வு!

இன்றைய வர்த்தகத்தில், நிறுவனத்தின் பங்குகள் 4% அதிகமாக உயர்ந்தன.

News image
Updated On :10 ஜூலை 2026, 7:19 pm IST

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், ஜூன் காலாண்டில் தனது நிகர லாபத்தில் 4.61 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில், அதன் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

பதற்றங்கள் தீவிரமடைந்த நிலையில், நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த தேவை, நடப்பு காலாண்டில் மீண்டும் மேம்படும் என்றும் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.

இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில், டிசிஎஸ் நிறுவத்தின் பங்கு 4.11 சதவீதம் உயர்ந்து ரூ. 2,132 ஐ எட்டியது. அதே வேளையில், நிஃப்டி-யில் இந்த பங்கு 4 சதவீதம் உயர்ந்து ரூ. 2,133.30 ஆக வர்த்தகமானது.

நிறுவனத்திந் முதல் காலாண்டு நிகர லாபம் 4.61 சதவீதம் அதிகரித்து ரூ. 13,349 கோடியாக உயர்ந்ததாகத் தெரிவித்தையடுத்து, அதன் பங்குகள் 4% உயர்ந்த நிலையில், தேவை மீண்டும் மேம்படும் என வழிகாட்டியதாலும், மற்ற ஐடி நிறுவன பங்குகளும் உயர்ந்தன.

செயற்கை நுண்ணறிவு காலத்தில் 315 பில்லியன் டாலர் மதிப்புள்ள உள்நாட்டு ஐடி துறையின் வளர்ச்சி நீடிக்குமா என்பது குறித்த கவலைகள் நிலவும் சூழலில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், சிறப்பு வருவாயை தவிர்த்துப் பார்க்கையில், நிறுவனத்தின் நிகர வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ. 13,849 கோடியாக உயர்ந்துள்ளது.

Summary

Shares of TCS climbed over 4 per cent on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.