மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் அறிமுகமாகிறது.
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 50, 60 ஃப்யூசன் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாளை வெளியாகிறது. எட்ஜ் 70 மாடல்களின் வரிசையில் அதிக செயல்திறன் கொண்ட போனாக இது வெளியாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா தளங்களில் பெறலாம்.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேட்டரி திறன்:
7,100mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் 90W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகின்றது.
திரை:
6.82-அங்குல குவாட் HD+ (1440 x 3168) வளைந்த/தட்டையான எக்ஸ்ட்ரீம் LTPO அமோல்ட் திரையைக் கொண்டுள்ளது.
மென்மையான 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 7,000 நிட்ஸ் மூலம் அதிக பிரகாசமான திரையை வழங்குகிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன், ஈரக் கைகளால் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் வாட்டர் டச் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
செயல்திறன் & சேமிப்புத்திறன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (3nm கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. இதில், இணைக்கப்பட்டுள்ள AI NPU காரணமாக, 46% அதிக செயல்திறனுடம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
8GB ரேம் மற்றும் 256GB சேமிப்பு வசதி, 12GB ரேம் மற்றும் 256GB சேமிப்பு வசதி மற்றும் 12GB ரேம் மற்றும் 512GB சேமிப்பு வசதி ஆகிய வேரியன்ட்களில் இந்த போன் வெளியாகவுள்ளது.
கேமராக்கள்:
பின்பக்க கேமரா: 50 மெகாபிக்ஸல் கொண்ட முதன்மை கேமரா, 8MP மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்புற கேமரா: 32 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் கேமராவுடன் 4K விடியோ ரெக்கார்டிங் வசதியைக் கொண்டுள்ளது.
மென்பொருள்:
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனில் 3 முக்கிய ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் வழங்கப்படும் என மோட்டோரோலா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
விலை:
மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் பேஸ் வேரியண்ட் (8GB ரேம் 256GB சேமிப்பு வசதி) மாடலின் அறிமுக விலையாக ₹44,999 to ₹49,999 நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற வேரியண்ட்களின் விலை நாளை ஸ்மார்ட்போன் வெளியாகும்போது அறிவிக்கப்படும்.
Summary
Motorola's new smartphone model, the Moto Edge 70 Max, is being launched.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8,000 mAh பேட்டரியுடன் வெளியாகும் ரியல்மி நார்ஸோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

நெல்லையில் ரூ.15,037 கோடியில் மின்கல ஆற்றல் சேமிப்பு ஆலை: முதல்வா் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
7,000mAh பேட்டரி திறன், குறைந்த விலை! மோட்டோ ஜி77 பவர் இந்தியாவில் அறிமுகமானது!
‘மோட்டோ’ எட்ஜ் 70 புரோ அறிமுகம்... என்னென்ன எதிர்பார்க்கலாம்?
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy




