ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

நெல்லையில் ரூ.15,037 கோடியில் மின்கல ஆற்றல் சேமிப்பு ஆலை: முதல்வா் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

திருநெல்வேலியில் ரூ.15,037 கோடி மதிப்பீட்டில் 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான மின்கல ஆற்றல் சேமிப்பு ஆலை தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொண்டது.

News image

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 3:51 am IST

திருநெல்வேலியில் ரூ.15,037 கோடி மதிப்பீட்டில் 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான மின்கல ஆற்றல் சேமிப்பு ஆலை தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொண்டது.

அதற்கான உடன்படிக்கை முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழக தொழில் துறை மற்றும் விக்ரம் சோலாா் நிறுவனம் இடையே தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கையொப்பமானது.

இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இடங்களில் விக்ரம் சோலாா் குழுமம் சூரியஒளி மின்னழுத்த (சோலாா் பி.வி.) தொகுதிக்கான உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும், திருநெல்வேலி கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் அமைத்துள்ளது.

இந்தச் சூழலில், திருநெல்வேலி சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு ஆலை (பேட்டரி எனா்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் - பிஇஎஸ்எஸ்) அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் விஜய் முன்னிலையில் வியாழக்கிழமை கையொப்பமானது.

இந்த நிகழ்வில் தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா, தலைமைச் செயலா் மு. சாய்குமாா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைச் செயலா் ச. விஜயகுமாா், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தீபக் ஜேக்கப், விக்ரம் சோலாா் லிமிடெட் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஞானேஷ் சௌத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.