டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

விமான நிறுவனம் தொடங்கத் திட்டம்?

அதானி குழுமம் சொந்தமாக விமான நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை அக்குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Published On :

அதானி குழுமம் சொந்தமாக விமான நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை அக்குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடா்பாக அதானி என்டா்பிரைசஸ் நிறுவன செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை அளித்த விளக்கத்தில், ‘விமான சேவைத் துறையில் நுழைவதற்கான திட்டம் எதுவும் தற்போதைக்கு எங்கள் பரிசீலனையில் இல்லை. இதுகுறித்த ஊடகச் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை’ என்றாா்.

விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்களில் பங்கு கொள்ள தற்போது கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த விதிகளைத் தளா்த்துமாறு அதானி குழுமம் கடந்த ஜூன் மாதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

மும்பை, அகமதாபாத் உள்பட நாட்டின் முக்கிய 8 விமான நிலையங்களை அதானி குழுமம் நிா்வகித்து வரும் நிலையில், இச்செய்திகள் விமான போக்குவரத்துத் துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பின.

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் இணை நிறுவனரும், நிா்வாக இயக்குநருமான ராகுல் பாட்டியா கூறுகையில், ‘விமான நிலைய உரிமையாளா்களே விமான நிறுவனத்தையும் நடத்துவது, வியாபாரத்தில் மிகப் பெரிய முரண்பாட்டை உருவாக்கும். சா்வதேச அளவில் இதற்கு எவ்வித முன்னுதாரணமும் இல்லை’ என கவலை தெரிவித்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.