நாட்டின் எரிசக்தி துறையில் முன்னணியில் உள்ள அகமதாபாதைச் சோ்ந்த டொரன்ட் பவா் நிறுவனம், மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, ரூ.3,800 கோடி நிதியைத் திரட்டியுள்ளது.
நிறுவனத்தின் நிதித் தேவைகளுக்காக தனியாா் பங்கீட்டு அடிப்படையில், பாதுகாப்பான, வரிக்குள்பட்ட மற்றும் மாற்ற முடியாத மொத்தம் 3,80,000 கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 8.10 சதவீதம் முதல் 8.20 சதவீதம் வரை வட்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் கடன் சந்தைப் பிரிவில் இப்பத்திரங்களைப் பட்டியலிடவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல்-ஜூன் காலாண்டு லாபம்! ஸ்ரீராம் ஃபைனான்ஸ்: ரூ. 3,453 கோடி

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்

வட்டி மானியத்துடன் ரூ. 14 கோடி கடன் வழங்க இலக்கு!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வீல்ஸ் இந்தியாவுக்கு ரூ. 37 கோடி லாபம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



