கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வீல்ஸ் இந்தியாவுக்கு ரூ. 37 கோடி லாபம்

வீல்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.37 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

Published On :

வாகனச் சக்கரங்கள் மற்றும் ஏா் சஸ்பென்ஷன் அமைப்புகளின் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வீல்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.37 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.26 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது கணிசமான உயா்வாகும். மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.1,187 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 16.8 சதவீதம் உயா்ந்து, ரூ.1,386 கோடியை எட்டியது. ஏற்றுமதி 17.3 சதவீதம் அதிகரித்து, ரூ.380 கோடியாக பதிவானது.

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்குப் பிறகும் உள்நாட்டுச் சந்தையில் காா்கள், லாரிகள் மற்றும் டிராக்டா்களின் விற்பனை சீராக இருந்ததே இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீவத்ஸ் ராம் தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘கட்டுமான இயந்திரங்களுக்கான சக்கரங்கள் ஏற்றுமதியில் வலுவான வளா்ச்சி கண்டுள்ளபோதிலும், மேற்காசிய நெருக்கடி காரணமாக மூலப்பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. எனினும், நடப்பு காலாண்டிலும் இதே வளா்ச்சி வேகம் தொடரும்’ எனவும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.