பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

உரசினால் தீப்பிடிக்கும் ஷூ! எங்கு வாங்குவது? என்ன விலை?

தீக்குச்சியைக் கொண்டு உரசினால் தீப்பிடிக்கும் வகையிலான ஷூ, சந்தையில் அறிமுகமாகியுள்ளது குறித்து...

World’s First Match-lighting Sneaker Maachis

உரசினால் தீப்பிடிக்கும் மாச்சிஸ் ஷூ - படம் / நன்றி - கோமெட்

Published On :

தீக்குச்சியைக் கொண்டு உரசினால் தீப்பிடிக்கும் வகையிலான ஷூ, சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஷூ தயாரிப்பு நிறுவனமான கோமெட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான ஷூக்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் ட்ரெக்கிங் செல்பவர்களைக் கவரும் வகையிலும் உரசினால் தீப்பிடிக்கும் ஷூவை அறிமுகம் செய்துள்ளது.

மாச்சிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்களின் முன், பின், பக்கவாட்டுப் பக்கங்களின் பல்வேறு இடங்களில் தீக்குச்சியை கொண்டு உரசினால் தீப்பிடிக்கும்.

இந்திய தீப்பெட்டி வடிவங்களை ஈர்ப்பாகக் கொண்டு இந்த ஷூக்களை கோமெட் நிறுவனம் தயாரித்துள்ளது. தீப்பெட்டியின் வண்ணத்தில் மற்றும் பழுப்பு நிற மெல்லிய தோல் வடிவில் புறத்தோற்றத்தை வடிவமைத்துள்ளது.

லிமிடட் எடிஷனாக குறைந்த் எண்ணிக்கையில் ஷூக்களை தயாரித்துள்ளது. இதன் விலை ரூ. 5,899. www.wearcomet.com என்ற இணையதளப் பக்கத்தில் இந்த ஷூவை முன்பதிவு செய்து பெறலாம்.

துரந்தர் படத்தில் நாயகன் ரன்வீர் சிங் தனது ஷூவில் இருந்து தீக்குச்சியை பற்றவைப்பார். அதனை மூலமாகக் கொண்டு இந்த ஷூவுக்கான விளம்பரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பழைய ஹிந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் ஷூவில் தீக்குச்சியை பற்றவைப்பது ஒரு ஸ்டைலான காட்சியாகவே இடம்பெற்றிருக்கும்.

இதனால் பாலிவுட்டின் கிளாசிக் உணர்வையும் இளம் தலைமுறையினரிடையே கொண்டுவரும் முயற்சியாக இந்த ஷூவை கோமெட் நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது.

Summary

Bengaluru company comet introduced World’s First Match-lighting Sneaker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.