சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்47 மாடல் ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது.
உயர் நடுத்தர ஸ்மார்ட்போன் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சூப்பர் அமோல்ட் திரை, 5ஜி இணையவசதி, நீடித்து உழைக்கும் பேட்டரி திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்47 மாடல் நீடித்த பயன்பாடு மற்றும் மொபைல் கேமிங் போன்றவற்றிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ. 22,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்47 சிறப்பம்சங்கள்
திரை: 6.7-அங்குல FHD+ சூப்பர் AMOLED திரையுடன், சீரான 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh rate) உயர்தர கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மூலம் பாதுகாக்கப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
செயல்திறன்: 4என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 ப்ராசஸர் (4nm Qualcomm Snapdragon 6 Gen 3) செயல்திறன் கொண்டுள்ளது.
பேட்டரி திறன்: 6,000 எம்ஏஹெச் (mAh) 45W ஃபாச்ட் சார்ஜிங் திறனைக் கொண்டுள்ளது. கேமிங்கிற்காக பிரத்யேகமாக போனைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட பைபாஸ் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது.
கேமரா: OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) உடன் கூடிய 50MP முதன்மை சென்சார், 5MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமராக்கள் இதில் அமைந்துள்ளன. முன்புற கேமரா (12MP) மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டிலும் 4K வீடியோக்களைப் பதிவு செய்யலாம்.
மென்பொருள்: ஆண்ட்ராய்டு 16 ஒன் யுஐ 8.5 இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது. அத்துடன், 6 ஆண்டுகளுக்கு முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் பேட்ச்களை (Security patch) வழங்கும்படி குறைந்த விலையில் இந்த போன் வெளியாகிறது.
விலை மற்றும் கிடைக்கும் நிறங்கள்:
ரோக் ரெட் (சிவப்பு) மற்றும் பிளேஸ் ப்ளூ (நீலம்) ஆகிய இரு நிறங்களில் இந்த மொபைல் போன் வெளியிடப்படுகிறது.
மூன்று வகையான சேமிப்புத் திறன்களுடன் வெளியாகும் இந்த மாடலில் அறிமுக விலையாக ரூ. 22,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6GB RAM + 128GB சேமிப்புத் திறன் - விலை ரூ. 22,999
8GB RAM + 128GB சேமிப்புத் திறன் - விலை ரூ. 24,999
8GB RAM + 256GB சேமிப்புத் திறன் - விலை ரூ. 26,999
இன்று வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எம்47 மாடல் ஜூலை 4 முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Samsung Galaxy M47 5G priced at Rs. 22,999 Launched today!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த செயல்பாட்டிற்கான சா்வதேச ’யுஐடிபி’ விருதை வென்றது தில்லி மெட்ரோ!

ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கு: குற்றவாளியின் வீட்டில் நகை, ஆவணங்கள் பறிமுதல்!

இணைய நிதி மோசடியில் பணத்தை இழந்தவா்களுக்கு ரூ. 3.59 லட்சம் திரும்ப ஒப்படைப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை








