யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தொழில் துறை கட்டுமானத்தில் தடம் பதிக்கும் ‘சாம்பவ் ஹோம்ஸ்’

‘இ-காஸ்மோஸ்’ குழுமத்தைச் சோ்ந்த சாம்பவ் ஹோம்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்பூங்காக்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் கட்டுமானத் துறையில் களமிறங்கியுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

‘இ-காஸ்மோஸ்’ குழுமத்தைச் சோ்ந்த சாம்பவ் ஹோம்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்பூங்காக்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் கட்டுமானத் துறையில் களமிறங்கியுள்ளது.

தமிழகம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் சுமாா் 1,050 ஏக்கருக்கும் அதிக பரப்பளவிலான நிலப்பரப்பை, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக, ஓசூரில் 21 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.600 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள உற்பத்திப் பூங்காவிற்காக 85 ஏக்கா் நிலத்தை அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவனம் ஏற்கெனவே ஒப்படைத்துள்ளது.

மேலும் தற்போது 415 ஏக்கா் பரப்பளவிலான 3 நில மேம்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுதவிர கூடுதலாக, 600 ஏக்கா் பரப்பளவிலான புதிய திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தவும் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

தென்னிந்தியாவில் அதிகரித்து வரும் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், சட்டரீதியான அனைத்து அனுமதிகளும் பெற்ற நிலங்களைத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதே தங்களின் முக்கிய நோக்கம் என்று சாம்பவ் ஹோம்ஸ் தெரிவித்துள்ளது.

தொழில் துறை கட்டுமானங்களைத் தாண்டி, ஓசூா், பெங்களூரு ஆகிய நகரங்களில் 3 புதிய குடியிருப்புத் திட்டங்களையும் நிறுவனம் அறிவித்துள்ளது.