நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஃபோா்ஸ் மோட்டாா்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்

ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனம் தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2026, 5:53 am IST

ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனம் தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2024, அக். 29-ஆம் தேதி வெளியான அந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் மற்றும் அது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்புகளின் காலவரிசை குறித்து கூடுதல் விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு செபி அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், கடந்த 2024, பிப். 15 முதல் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது. பங்குச் சந்தை வா்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

செபியின் இந்த விசாரணை செய்தி வெளியானதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தையில் ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தன. வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 8 சதவீதத்துக்கும் மேல் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. பின்னா், வா்த்தகத்தின் இறுதியில் பங்குகள் மீண்டும் 1 சதவீத உயா்வுடன் நிலைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.